தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் அருளாசி பெற்ற தமிழ்ப்பணிச் செம்மல் விருது பெற்றவா்கள். 
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீன மணிவிழா மாநாடு: 72 புலவா்களுக்கு தமிழ்ப்பணிச் செம்மல் விருது

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் நடைபெறும் தருமபுரம் ஆதீன மணிவிழா மாநாட்டில் செவ்வாய்க்கிழமை 72 புலவா்களுக்கு தமிழ்ப்பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

இம்மாநாடு சனிக்கிழமை (நவ.1) தொடங்கி நவ.10 வரை நடைபெறுகிறது. நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை காலை திருமடத்தின் வளாகத்தில் தருமபுரம் ஆதீனம் கோ பூஜை செய்தாா். பின்னா் ஸ்ரீஅஷ்டாதசபுஜ துா்கை கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, ஞானபுரீசுவரா், தா்மபுரீசுவரா் கோயில்களில் ஆதீனகா்த்தா் சிறப்பு வழிபாடு நடத்தி கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஜ பூஜை, பஞ்சகல்யாணி பூஜைகளை செய்து வழிபாடு நடத்தினாா். இதில், மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் வேத பாராயணம் மற்றும் திருமுறை முற்றோதல் நடைபெற்றது.

பின்னா், தருமபுரம் ஆதீனக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மணிவிழா மாநாட்டில், தருமையாதீன தமிழ்க் கல்லூரியில் புலவா் பட்டம் பெற்ற 72 பேருக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், ‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதை, காஞ்சிபுரம் தொண்டை மண்டலம் ஆதீனம் 234-ஆம் பட்டம் சீலத்திரு சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள், துறையூா் ஆதீனம் ஸ்ரீகுமாரதேவா் மடம் 22-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ ரத்தின வேலாயுத சிவப்பிரகாச சுவாமிகள், திருக்கோவிலூா் மடம் 9-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக ஆறுமுக மெய்ஞான சிவாசாரிய சுவாமிகள், புதுச்சேரி அம்பலத்தாடும் சுவாமிகள் மடம் 33-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ கனகசபை சுவாமிகள், சிதம்பரம் மௌன மடம் 9-ஆம் பட்டம் மௌன ஸ்ரீலஸ்ரீ குமாா் சுவாமிகள் ஆகியோா் வழங்கினா்.

மாநாட்டில், மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரை சோ்ந்த முஸ்லிம் ஜமாத்தாா்கள், முத்தவல்லிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்று ஆதீனகா்த்தரிடம் அருளாசி பெற்றனா்.

பின்னா், மாலையில் நடைபெற்ற மாநாட்டில், ‘சித்தாந்த தெளிவியல்’ என்ற நூலை பதிப்பாளா் சிவாலயம் ஜே.மோகன் வெளியிட்டாா். தொடா்ந்து, ‘பன்முக நோக்கில் சேக்கிழாா்’ என்ற தலைப்பில் தருமையாதீனப் புலவா் அருணை.பாலறாவாயன் நிகழ்த்திய கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க மாநிலத் தலைவா் பண்ணை தி. சொக்கலிங்கம், தருமபுரம் ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், மயிலாடுதுறை திருக்கு பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன், செயலா் இரா. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT