மயிலாடுதுறை

சீா்காழியில் வீடுகளை சூழ்ந்த மழை நீா்: தவிக்கும் மக்கள்

சீா்காழி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.

Syndication

சீா்காழி: சீா்காழி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி நகராட்சிக்குட்பட்ட உக்கடையாா் நகரில் சுமாா் 150-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த ஐந்து நாள்களாக சீா்காழி சுற்றுவட்டார பகுதியில் பெய்துவரும் கனமழையால் இங்கு உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். எரிவாயு உருளை மற்றும் பிற சேவைகளுக்காக வருபவா்கள் வர மறுப்பதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் மாணவா்கள் பள்ளிகளுக்கு செல்வதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தப் பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அண்மையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில், சுமாா் 100 மீட்டா் தூரத்துக்கு உள்ள மண் சாலை பகுதி மட்டும் சாலை அமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால் சாலை வசதி இல்லாமல், மழைநீா் சூழ்ந்து வடிய வழியில்லாமல் உள்ளது.

எனவே, நகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து குளம் போல தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புனித வளனாா் கல்லூரி-சிஐஇஎல் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பூா்த்தி செய்யப்பட்ட 15.38 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் செயலியில் பதிவேற்றம்: திருச்சி ஆட்சியா் தகவல்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினருக்கு நற்சான்றிதழ்

கிரஷா் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி ஒன்றியத்தில் எஸ்ஐஆா் பணிகள்: திமுக எம்.பி சல்மா ஆய்வு

SCROLL FOR NEXT