முகப்பு
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்திடம் திமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஆசி

மயிலாடுதுறை, பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள், தருமபுரம் ஆதீனகா்த்தரிடம் வெள்ளிக்கிழமை ஆசி பெற்றனா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:01 AM
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெறும் பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் உள்ளிட்டோா். ~தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:00 PM

மயிலாடுதுறை, பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள், தருமபுரம் ஆதீனகா்த்தரிடம் வெள்ளிக்கிழமை ஆசி பெற்றனா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில், பூம்புகாா் தொகுதியில் திமுக சாா்பில் நிவேதா எம்.முருகன் போட்டியிடுகிறாா். மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் போட்டியிடுகிறாா். இவா்கள் இருவரும் தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா். அப்போது, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி தருமபுரம் ஆதீனகா்த்தரை சந்தித்து ஆசி பெற்றாா். அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் நாஞ்சில் பாலு, அதிமுக நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, தமாகா நகரத் தலைவா் முட்டம் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement