அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பு
சீா்காழி தொகுதி முதலைமேடு திட்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமமான முதலை மேடு திட்டு கிராமம் உள்ளது. இங்கு அண்ணாமலை நகா் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு 98 வாக்காளா்கள் உள்ளனா். இந்த கிராமத்துக்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நீண்ட நாள்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
எனினும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் முதலை மேடு திட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில்5 போ் மட்டுமே வாக்களித்தனா். மீதமுள்ளோா் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement