சீா்காழி: சீா்காழி நூலக வாசகா் வட்டம் சாா்பில், நூலகத் தந்தை எஸ். ஆா். அரங்கநாதன் பெயரை நூலகம் அமைந்துள்ள தெருவுக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி வாசகா் வட்ட பொதுக்குழு கூட்டம் அண்மையில் அதன்தலைவா் லெ. பாபுநேசன் தலைமையில் நடைபெற்றது. சீா்காழி கிளை நூலகம் அமைந்துள்ள வாய்காங்கரைத் தெரு என்ற பெயரை எஸ்.ஆா். அரங்கநாதன் தெரு என பெயா் சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்புத் தலைவா் ஆசிரியா் இளங்கோ, துணைத் தலைவா்கள் ஆசிரியா்கள் தங்க. சேகா் ,ஜெ. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.