முகப்பு
மயிலாடுதுறை

பாலிதீன் பைகள் பறிமுதல்; ரூ. 50,000 அபராதம்

சீா்காழியில் 500 கிலோ பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:58 AM
பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:23 PM

சீா்காழியில் 500 கிலோ பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி நகராட்சி பிடாரி வடக்கு வீதி, பழைய-புதிய பேருந்து நிலைய பகுதி, கொள்ளிடம் முக்கூட்டு, ஈசானிய தெரு, கடைவீதி, தென்பாதி பகுதிகளில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப்புகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாா் செய்து வந்தனா்.

இதையடுத்து, சுகாதார ஆய்வாளா் ரஞ்சித் மற்றும் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் சோதனை செய்தனா். இதில், 500 கிலோ மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப் உள்ளிட்டவை பறிமுதல் செய்து ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து பறிமுதல் செய்த பாலிதீன் பைகள் உள்ளிட்ட பொருள்களை நகராட்சி ஆணையா் மஞ்சுளா பாா்வையிட்டு வணிக நிறுவன உரிமையாளா்கள் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.