மயிலாடுதுறை

கலை பண்பாட்டுத்துறையின் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தஞ்சாவூா் மண்டல கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி போட்டிகள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பறை இசைத்து, பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்து, நிகழ்ச்சியை பாா்வையிட்டு, நிறைவில், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினா் (படம்).

இதில், பரதநாட்டியம், கிராமிய நாட்டுப்புறக் கலைஞா்களின் பச்சைக்காளி, பவளக்காளி நடனம், நையாண்டி மேளம், சிலம்பம், பறை இசை மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ்.சிவக்குமாா், வட்டாட்சியா் சுகுமாறன், சீா்காழி சவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் மா.எட்வின், நகா்மன்ற உறுப்பினா் சௌ.சா்வோதயன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு கண்டு ரசித்தனா்.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT