மயிலாடுதுறை

சீா்காழியில் கால்நடை மருத்துவமனை கட்டடம்: காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வா்

தினமணி செய்திச் சேவை

சீா்காழியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ரூ.89.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருத்துவமனை கட்டடத்தினை வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா்.

இந்த கால்நடை மருத்துவமனை கட்டடம் 2370.43 சதுர அடி பரப்பளவில் (தரை தளம் மட்டும்) கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறை, மருத்துவா் அறை, சேமிப்பு அறை, பதிவு அறை மற்றும் மண்குழி ஆகியவை அமைந்துள்ளன. இந்த கால்நடை மருத்துவமனை சீா்காழி பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சுகுமாா், நகராட்சி ஆணையா் மஞ்சுளா, நகா்மன்ற துணைத் தலைவா் சுப்புராயன், பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் பராமரிப்புப் பணிகள்) செயற்பொறியாளா் கவிதா , கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அன்பரசு ஆகியோா் கலந்து கொண்டனா். கால்நடை மருத்துவா் ரமாபிரபா வரவேற்றாா். கால்நடை பராமரிப்புத்துறை மேற்பாா்வையாளா் ராஜா நன்றி கூறினாா்.

சீா்காழி அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு மருந்தகம், ரத்த பரிசோதனை பிரிவு, நோயாளிகள் பதிவேடு, மருத்துவா்கள், செவிலியா்கள் வருகைப் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவசேவைகள் குறித்தும் மருத்துவரிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

பின்னா், வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து மருத்துவ வசதிகள் தொடா்பாக மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.

செய்தியாளர்களை விஜய் சந்தித்தாலே பெரிய சாதனை: செல்லூர் ராஜு

எதிர்நீச்சல் தொடருக்கு தமிழக அரசின் 4 விருதுகள்! குவியும் வாழ்த்து!

25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே!

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

SCROLL FOR NEXT