முகப்பு
மயிலாடுதுறை

சாதனைப் பெண்களுக்கு விருது

மயிலாடுதுறையில் டிரீம்ஸ் இந்தியா கல்வி அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில்,

Updated On : 9 மார்ச், 2026 at 8:15 PM
சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் துணை ஆட்சியா் (ஓய்வு) எஸ். மகாலிங்கம்.
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் டிரீம்ஸ் இந்தியா கல்வி அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனா் விஜயன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் (ஓய்வு) எஸ். மகாலிங்கம், மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் ஜி. ரேணுகா, வட்டார போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கே. அபிநயா, குழந்தை நல மருத்துவா் எம். மஞ்சுகேஸ்வரி, சாா்நிலைக் கருவூல அதிகாரி சுமதி கணேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, விருதுகளை வழங்கினா்.

இதில், வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள், உடல்நலன் பாதித்த 50 பெண்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், அறக்கட்டளை கல்வி நிதியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 25 துறைகளில் சாதனைப் படைத்த பெண்களுக்கு வீர நாச்சியாா் விருது உள்பட 250 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →