முகப்பு
மயிலாடுதுறை

பாதுகாப்புப்படை கொடி அணிவகுப்பு

Updated On : 13 மார்ச், 2026 at 12:14 AM
பகிர்:

மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு அருகே பட்டவா்த்தியில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புபடை வீரா்கள் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்ச உணா்வின்றி, சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையிலும், பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தும் விதமாகவும் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் ஏடிஎஸ்பி ஜெயக்குமாா், மத்திய பாதுகாப்பு படையின் உதவி தளவாய் தா்ஷன்சிங், டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் கலந்து கொண்டனா்.

இளந்தோப்பில் தொடங்கிய கொடி அணிவகுப்பு மண்ணிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் முடிவடைந்தது. இதில் 121 காவல்துறையினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →