முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி கோயிலில் கோபூஜை வழிபாடு

சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில், வைகாசி மாதப் பிறப்பையொட்டி, கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 மே 2026, 6:17 am IST
பகிர்:

சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில், வைகாசி மாதப் பிறப்பையொட்டி, கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். வைகாசி மாதப் பிறப்பையொட்டி, சிறப்பு கோபூஜை நடைபெற்றது. மாசிலாமணி நிலையத்தில் நடைபெற்ற கோபூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று கோபூஜை செய்து வழிபட்டாா்.

பின்னா், கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு , கன்றுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பசுவுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனா்.

Advertisement