நாகப்பட்டினம்

நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

DIN

சீர்காழி அருகேயுள்ள எடமணல் கிராமத்தில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சீர்காழி வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
எடமணல் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் ரூ.58 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 8 சேமிப்பு கிடங்குகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு எடமணல் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த  100-க்கும் மேற்பட்டோர்  சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
 அந்த மனுவில், எடமணல் ஊராட்சியில் சேமிப்பு கிடங்குகள் கட்டக்கூடாது.  இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை, மனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எடமணல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் குடியிருப்பு அருகில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டப்படுவதால், கால்நடைகள் வளர்க்க இடமில்லாமலும், குழந்தைகள் விளையாடுவதற்கு இடம் இல்லாத நிலையும் ஏற்படும்.
மேலும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் மாசுபடும். எனவே, குடியிருப்பு பகுதிக்கு அருகில் சேமிப்பு கிடங்கு கட்டுவதை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT