நாகப்பட்டினம்

கராத்தே வீரர்களுக்கு கருப்புப் பட்டை

DIN

கராத்தே பயிற்சி பெற்ற வீரர்களுக்கு, கருப்புப் பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, மயிலாடுதுறை அருகேயுள்ள கூறைநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய தற்காப்பு கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெக.வீரபாண்டியன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் ஏ. பி. கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை பிளேஸ் அகாதெமி, இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மற்றும் குத்தாலம் இஸ்ஸா அகாதெமியில் கராத்தே பயிற்சி பெற்ற 15 வீரர்களுக்கு கருப்புப் பட்டை ( பிளாக் பெல்ட்) அணிவிக்கப்பட்டது.
தற்காப்புக் கலை வீரர்கள் கராத்தே, சிலம்பம் மற்றும் ஆயுத தற்காப்பு கலைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்தனர். நிகழ்ச்சிகளில், தொழிலதிபர் வெங்கட்ராமன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், வழக்குரைஞர் புகழரசன் மற்றும் தற்காப்புக் கலை பயிற்றுநர்கள் பீட்டர்நெல்சன், எஸ். ரவிச்சந்திரன், சென்னை கே. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT