நாகப்பட்டினம்

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

DIN

மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடைபெற்றன.
அதைத் தொடரந்து புனிதநீர் வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை முழங்கியபடி கடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கோயிலின் விமானங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர்.
குடமுழுக்கைக் காண, பெருகவாழ்ந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT