முகப்பு
நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் சீரமைப்பு பணி

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் பாசன வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் பாசன வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக. 29) நள்ளிரவு முதல் தொடர்ந்து 2 நாள்களாக பெய்த மழையால் வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் உள்ள திருநகரி வாய்க்கால் மற்றும் கோவிலான்வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளக்குமுகத்தெரு, தெற்குவெளி காலனி, மருவத்தூர், காந்திநகர், தோட்டமாணியம்,  அண்ணாநகர், புங்கனூர்சாலை, திருவாவடுதுறை மடத்துதெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.  இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி, செயல் அலுவலர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் வைத்தீஸ்வரன்கோயில், குத்தாலம், மணல்மேடு ஆகிய பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு மேடுபள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெற்றது.
மேலும், வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.  நல்லான்சாவடி, நயினார்தோப்பு, அட்டக்குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →