நகைக் கடையில் திருடிய 2 பெண்கள் கைது
மயிலாடுதுறையில் நகைக் கடையில் திருடிய 2 பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் நகைக் கடையில் திருடிய 2 பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு, கடந்த 12.7.2017 அன்று வந்த 2 பெண்கள், நகை வாங்குவதுபோல் சைகை செய்து கடையிலிருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து நகைக் கடை ஊழியரான ந. கலியமூர்த்தி (55) என்பவர் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட பிரியதர்ஷினி (24), சுமதி (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.