முகப்பு
நாகப்பட்டினம்

நகைக் கடையில் திருடிய 2 பெண்கள் கைது

மயிலாடுதுறையில் நகைக் கடையில் திருடிய 2 பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

மயிலாடுதுறையில் நகைக் கடையில் திருடிய 2 பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு, கடந்த 12.7.2017 அன்று வந்த 2 பெண்கள், நகை வாங்குவதுபோல் சைகை செய்து கடையிலிருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து நகைக் கடை ஊழியரான ந. கலியமூர்த்தி (55) என்பவர் அளித்த  புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட  பிரியதர்ஷினி (24),  சுமதி (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →