நாகப்பட்டினம்

பாப்பாகோவில் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்

DIN

நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் தர்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக்கூடு ஊர்வலம்  புதன்கிழமை அதிகாலை  நடைபெற்றது.
பாப்பாகோவில் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான கந்தூரி விழா அக். 1 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் தொடங்கியது.
முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த சந்தனக்கூடு, மீண்டும் தர்காவுக்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்தது. பின்னர் தர்காவை மூன்று முறை வலம் வந்தபின், சந்தனக்கூடு தர்காவினுள் எடுத்துச் செல்லப்பட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT