வேதாரண்யத்தில் இலங்கையைச் சேர்ந்தவர் கைது
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகை பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் நிற்பதாக வேதாரண்யம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை மானம் மாவட்டம் பருத்தித்துறை, இன்பச்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் எம்.எம். சிறிமுருகன் (32) என்பதும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக மீன்பிடி படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பாஸ்போர்ட் சட்ட விதிகளின்படி வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.