நாகப்பட்டினம்

இரட்டை ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

DIN

செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் அருள்பாலிக்கின்றனர். இதனால், இங்கு வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT