நாகப்பட்டினம்

புதுப்பட்டினம் தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாகத் தேர்வு

DIN

சீர்காழி அருகேயுள்ள புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  நாகை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, அண்மையில் அறிவிக்கப்பட்டது.
  இப்பள்ளியில் 165 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியர், நான்கு உதவி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் வகுப்பறை பராமரிப்பு, தூய்மைப் பணி, சுற்றுப்புறச் சுகாதாரம் மற்றும் மாணவர்களின் கற்கும் திறன், நன்னடத்தை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தேர்வுக் குழுவினர் 3 நாள்கள் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் அறிவிக்கை சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்,  தேர்வுக்குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, புதுபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்டத்திலேயே முதன்மையான பள்ளியாக அறிவித்துள்ளார். 
இதையொட்டி, பள்ளி தலைமையாசிரியர் கண்ணன்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் குமார்,  கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புஷ்பலதா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT