நாகப்பட்டினம்

அரசுப் பேருந்து மீது கல் வீச்சு: ஓட்டுநர் காயம்

DIN

நாகை மாவட்டம், சீர்காழியில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்தை வைத்தீஸ்வரன்கோயில் நயினார்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெ. ஜெயசீலன் ஓட்டி வந்தார். 
நன்னிலம் கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் நடத்துநராக பேருந்தில் பணியில் இருந்தார். 
அதிகாலை 3.20 மணியளவில் சீர்காழி புறவழிச்சாலையில் கோயில்பத்து நான்கு சாலை சந்திப்பு முன்பாக பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு, ஓட்டுநர் ஜெயசீலன் நெற்றியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து, பேருந்தில் வந்த 54 பயணிகளும் மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஓட்டுநர் ஜெயசீலனை, அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்கால் கிளை மேலாளர் கபிலன், சீர்காழி கிளை மேலாளர் உதயக்குமார் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து, சீர்காழி புறவழிச்சாலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகேயுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக்கொண்டு, சீர்காழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT