நாகப்பட்டினம்

பள்ளிவாசலில் தடுப்புச் சுவர்: அமைச்சர் ஆய்வு

DIN

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை அக்கரைப் பள்ளிவாசல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
தோப்புத்துறையை அடுத்துள்ள பெரியகுத்தகை பகுதி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் நுற்றாண்டை கடந்த சிறப்புக்குரியது. அக்கரைப் பள்ளிவாசல் என அழைக்கப்படும் இந்த பள்ளி வாசல், கடல் சீற்றம், மண் அரிப்பு போன்ற பல இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நேரங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு பணிகளில் மத நல்லிணக்கத்தோடு செயல்படும் பல தரப்பினரது பங்களிப்பும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியோடு, ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் கட்டும் பணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு செய்தார்.
முன்னதாக, சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையை பள்ளிவாசல் பயன்பாட்டுக்காக தோப்புத்துறை ஜமாத்தாரிடம் ஒப்படைந்தார்.
நிகழ்ச்சியில், தோப்புத்துறை ஜமாத் தலைவர் ஐ. நவாஸ்தீன், துணைத் தலைவர்கள் அமிர்ஜான், ஆர்.இ. முகமதுரபீக், செயலாளர் எம். நஜிமுதீன், பொருளாளர் எம்.கே. யூசுப்ஷா, சமூக ஆர்வலர் பி. சாகுல்கமீது, அதிமுக நிர்வாகிகள் இரா. கிரிதரன், எஸ்.எம். எழிலரசு உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT