நாகப்பட்டினம்

திருநகரி பெருமாள் கோயில் கொடி மரத்துக்கு ஐம்பொன் கவசம் பிரதிஷ்டை

DIN

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருநகரி கல்யாணரெங்கநாத பெருமாள் கோயிலில் உள்ள கொடி மரத்துக்கு ஐம்பொன்னால் ஆன கவசம் பிரதிஷ்டை செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த திருநகரி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள் தேவியர்களுடன் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் கடந்த ஆண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடி மரத்துக்கு ஐம்பொன்னால் ஆன கவசங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது.
முன்னதாக,  2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று புனிதநீரால் கொடி மரத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT