நாகப்பட்டினம்

காவல் துறையினருக்கு புத்தாக்கப் பயிற்சி

DIN

காவல் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான புத்தாக்கப் பயிற்சி நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நாகை மாவட்ட காவல் துறை மற்றும் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவை  இணைந்து நடத்திய, இப்பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.வியஜகுமார் தொடங்கி வைத்தார். மீனாட்சி மருத்துவமனை ஊக்கப் பயிற்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் பணியிலிருக்கும் காவல் துறையினர் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து பயிற்சியளித்தார். மீனாட்சி மருத்துவமனை தலைமை நிர்வாகி மருத்துவர் ரமேஷ்பாபு, ஒருங்கிணைப்பாளர் பூபதி குமார் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள், அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT