நாகப்பட்டினம்

அரசாணையை தீயிட்டு கொளுத்தி போராட்டம்

DIN

நாகையில் வியாழக்கிழமை, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் தமிழக அரசின் அரசாணையை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
தமிழக அரசின் அரசாணை 56, அரசுப் பணியிடங்களை குறைத்தும், அத்தியாவசியப் பணியிடங்கள் வெளி முகமை மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த அரசாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நாகையில் அரசாணையை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நாகை மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பங்கேற்ற சங்க மாநிலச் செயலர் எம். சௌந்தரராஜன் பேசியது:
அரசுத் துறைகளை தனியார் மயமாக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அரசுப் பணியிடங்களைக் குறைத்தும், அத்தியாவசியப் பணியிடங்களை வெளிமுகமை மூலம் மேற்கொள்ளவும் தமிழக அரசாணை- 56  வழிவகை செய்கிறது.
இந்த அரசாணையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு போராட்டங்களால் பெறப்பட்ட தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
போராட்டத்தில், சங்க நாகை மாவட்டச் செயலர் ஏ.டீ. அன்பழகன், நாகை தொழிற்சங்கக் கூட்டமைப்புத் தலைவர் சு.சிவக்குமார், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் இளவரசன், அரசு ஊழியர் சங்க  நாகை வட்டத் தலைவர் சி. பாலசுப்பிரமணியன், செயலர் எம்.தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில், அரசாணை 56-க்கு தீ வைத்து கொளுத்தப்பட்டு, தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT