நாகப்பட்டினம்

பொங்கலுக்கு தயாரான வாழை மரங்கள் சேதம்

DIN


நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், கஜா புயலால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாகுபடி முற்றிலும் சேதமடைந்ததால், விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கிடாரங்கொண்டான், கீழையூர், பொன்செய், முடிகண்டநல்லூர், மேலப்பாதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. கஜா புயலால் ஒட்டுமொத்த வாழை சாகுபடியும் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர் கூறியது:
கிடாரங்கொண்டான் பகுதியில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ரூ.2 லட்சம் வரை செலவு செய்து பயிரப்பட்ட 2 ஆயிரம் வாழை மரங்களும் கஜா புயலில் முறிந்து விழுந்துவிட்டன.
பொங்கல் பண்டிகையின்போது அறுவடை செய்ய வேண்டி, தார் போட்டிருந்த நிலையில் வாழை மரங்கள் முற்றிலும் அடியோடு சாய்ந்துவிட்டன. தகுந்த நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்கினால்தான் பாதிப்பிலிருந்து மீளமுடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT