நாகப்பட்டினம்

மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

DIN

நாகை மாவட்டம், ஆக்கூரில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிளைச் செயலாளர் தவ்பிக் அஹமது தலைமை வகித்தார். பொருளாளர் முக்தார், துணைச் செயலாளர்கள் சல்மான், முகம்மது சகின், மாணவர் இந்தியா அமைப்பின் செயலாளர் அமிருல் அஸ்லம், மருத்துவரணி செயலாளர் ஜஸ்வத் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான் கலந்துகொண்டு, கட்சியின் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவத்தைப் பெற்றுக்கொண்டார். ஆக்கூர் கிளை தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக ஜஸ்பர், இளைஞரணி செயலாளராக நஸ்ருல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. காவிரி சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மழை காலத்தை முன்னிட்டு ஆறு, ஏரி, கால்வாய்களில் தூர்வாரப்படாத இடங்களைத் தூர்வாரி, மழைநீரை முறையாக சேமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT