நாகப்பட்டினம்

உலக தற்கொலை தடுப்பு வார விழிப்புணர்வு பேரணி

DIN


நாகை மாவட்டம், சீர்காழியில் உலக தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி அரசு மருத்துவமனையில் தொடங்கிய விழிப்பணர்வு பேரணிக்கு, தலைமை மருத்துவர் தேவலதா தலைமை வகித்தார். ரோட்டரி மருத்துவப் பணிகள் இயக்குநர் பழனியப்பன், கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இதில், ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, விழிப்புணர்வுப் பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு பிரதான வீதிகளின் வழியாகச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்குக்கு மருத்துவர் ஆர்த்தி பிரியங்கா தலைமை வகித்தார். மருத்துவர் வித்யா முன்னிலை வகித்தார். கருத்தரங்க நோக்கம் குறித்து முதன்மை மருத்துவர் பானுமதி உரையாற்றினார். பன்னாட்டு பயிற்றுநர் பாபுநேசன் கருத்துரை வழங்கினார். மருந்தாளுநர் முரளி நன்றிகூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT