நாகப்பட்டினம்

தரங்கம்பாடி கடற்கரையில் மாணவர்கள் தூய்மைப் பணி

DIN

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி, நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், தரங்கம்பாடி வட்டாட்சியர் அ. சுந்தரம் கலந்துகொண்டு, தூய்மைப்பணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ், துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ், முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் தூய்மைப்பணியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
சென்னை கடல்சார் நிறுவனம், கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், பல்நோக்கு சங்கம், மாணவர் எக்ஸ்னோரா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT