நாகப்பட்டினம்

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை

DIN

வருவாய் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு வருவாய் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநிலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்க நிறுவனர் ரா. செல்வராஜன் தமிழக முதல்வர், துணை முதல்வர், வருவாய்த் துறை அமைச்சர்ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை  மனு விவரம்: தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் இதுவரை அதிமுக அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. உள்ளாட்சி மற்றும் சட்டப் பேரவை, மக்களவைத் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெளிப்படையான ஆதரவைத் தந்து அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட்டுள்ளது.
தமிழக  முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, 2016 மே  மாதத்தில் நடைபெற்ற  சட்டப் பேரவை கூட்டத் தொடரில் , 110 விதியின்கீழ் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் எனவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு   அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, 1.4.2016-இல் அதிமுக தலைமை அலுவலகத்தில், தமிழக அமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி,  ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை குறித்து எடுத்துக் கூறப்பட்டபோது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு கிராம  உதவியாளர்களின் கோரிக்கை  நிறைவேற்றப்படுவதுடன் முதல் கையெழுத்தாக  இருக்கும் என உறுதியளித்தனர். கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கியும், ஓய்வூதியம் வழங்கியும் ஆணைப் பிறப்பித்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கிராம உதவியாளர்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளனர். 
இந்நிலையில், செப்.30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் ஆகியோர்  கிராம உதவியாளர்களின் நீண்ட  கோரிக்கையை  நிறைவேற்றும் வகையில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட  ஊதியம் என அறிவிப்பை வெளியிடவேண்டும் எனவும் அந்த மனுவில்  தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT