நாகப்பட்டினம்

ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்

DIN

மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான, அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில், சப்தஸ்தானப் பெருவிழா ஏப்ரல் 9 -ஆம் தேதி கணபதி ஹோமம் உள்ளிட்ட  வழிபாடுகளுடனும், 10-ஆம் தேதி கொடியேற்றத்துடனும் தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அறம் வளர்த்த நாயகி உடனாகிய அய்யாறப்பர் எழுந்தருளியதும்,  நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வழிநெடுங்கிலும், பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு,  சுவாமிக்கு அர்ச்சனை செய்து  வழிபட்டனர்.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT