நாகப்பட்டினம்

கோடியக்கரை கடற்கரையில் ஒதுங்கிய 30 கிலோ பீடி இலை மூட்டைகள்

DIN

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கையில் ஒதுங்கிய 30 கிலோ பீடி இலை மூட்டைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். 
கோடியக்கரை படகுத்துறையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ள தனியார் உப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பம்புஹொஸ் பகுதியில் இரண்டு வெள்ளை கோணி மூட்டைகள் கிடந்தன. இதையறிந்த போலீஸார் கோணிகளைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.  அப்போது, இரு மூட்டைகளிலும் மொத்தம் 30 கிலோ எடையில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இந்த பீடி இலைகள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லவோ அல்லது இலங்கையில் இருந்து மர்ம நபர்களால் கடத்தி வந்ததாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT