நாகப்பட்டினம்

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

DIN

நாகை அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
 திருவாரூர் மாவட்டம், களப்பால் பகுதியிலிருந்து கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று காரைக்கால் மாவட்டம், நரிமணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை செ. கோபு (36) ஓட்டினார். நாகை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில், நாகையை அடுத்த கருவலேங்கடை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி நிலம் மற்றும் வாய்க்காலில் கொட்டி வீணாகியது. லாரி ஓட்டுநர் கோபு மற்றும் கிளீனர் வேல்முருகன் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள், பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் இயந்திரம் உதவியுடன் மீட்டனர். இதனால், நாகை- வேளாங்கண்ணி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT