நாகப்பட்டினம்

கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி

DIN

நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயில் வளாகத்தில், நேரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை தூய்மைப் பணிகளை செய்தனர். 
தேசிய பசுமைப்படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் தேசிய பசுமைப்படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் தூய்மைப் பணிகளை செய்தனர். கோயில், நிர்வாகம் மற்றும்  பக்தர்கள்  சார்பில் மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஞானசேகரன், தேசிய பசுமைப்படை  நாகை மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் மா. முத்தமிழ் ஆனந்தன், நேரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  பள்ளி முதல்வர் சரஸ்வதி, பள்ளி துணை முதல்வர் எம். புவனேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கி. வீரமணி, கோயில் செயல் அலுவலர் எஸ். குடியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT