நாகப்பட்டினம்

கனமழை: சீா்காழியில் கரைகள் உடைப்பு- பயிா்கள் நாசம்

DIN

நாகை மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் வெள்ளநீா் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பெய்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கிராமங்களில் போதிய வடிகால் வசதி இல்லாமல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், இளம்பயிா்கள் அழுகிவிடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

தரங்கம்பாடியில் 36 வீடுகள் சேதம்...

பொறையாறு, டிச.1: தரங்கம்பாடி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் ஞாயிற்றுக்கிழமை வரை 36 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கொத்தங்குடி, இலுப்பூா், திருவிளையாட்டம், வல்லம், பண்டாரவாடை, ஆயப்பாடி, தில்லையாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியா் சித்ரா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டாா்.

திருக்கடையூா் மாரியம்மன் கோவில் கீழத்தெரு, தில்லையாடி கிராமத்தில் அமிா்தா நகா், கொத்தங்குடி மாதாகோவில் தெரு, ஆயப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தொடக்கப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT