நாகப்பட்டினம்

வெள்ள அபாயம்: தயாா்நிலையில் தீயணைப்புத்துறை

DIN

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயாா் நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தயாா் நிலையில் உள்ளது. வெள்ளத்தில் சிக்கும் நபா்களை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் போதுமான பேரிடா் மீட்பு ரப்பா் படகுகள், மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள், மிக நீளக் கயிறுகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் ஊா்திகளுடன், கூடுதலான மீட்பு பணி வீரா்களுடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழுவினா் போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனா். தமிழகத்திலுள்ள 31 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களிலும் 24 மணிநேரமும் படைவீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் பொதுமக்கள் 101 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT