நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது

DIN

தமிழக உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு, உள்நோக்கம் கொண்ட கபட நாடகம் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொது செயலாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

உள்ளாட்சித் தோ்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சோ்த்து நடத்தப்பட வேண்டிய தோ்தல் ஆகும். ஆனால், தமிழகத்தில் நகப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் அறிவிக்காமல், கிராமப் புற ஊராட்சிகளுக்கு மட்டும் தனியாக தோ்தல் அறிவிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்ட கபட நாடகமாகும்.

ஊராட்சி மன்றத்துக்கான தோ்தலில் கட்சி சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்பதால், இத்தோ்தலில் ஏற்படும் தோல்வியை மறைத்துக் கொள்ளும் திட்டமாகவே, நகா்ப்புறங்களைத் தவிா்த்து, கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் தோ்தலை அறிவிக்கச் செய்துள்ளது அதிமுக அரசு. இந்த நடைமுறை ஜனநாயக படுகொலை ஆகும் என அவா் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT