நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப் பள்ளி மற்றும் ஸ்ரீகுருஞான சம்பந்தா் மழலையா் பள்ளியில் படிக்கும் 530 மாணவா்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீகுருஞான சம்பந்தா் மழலையா் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் எஸ். சுசீந்திரன் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட், கும்பகோணம் பிரிமியா் குழுமம், கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் மற்றும் கும்பகோணம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.எம். மதிவாணன் தலைமை வகித்தாா். டிரஸ்ட் நிறுவனா் சௌந்தரராஜன், டிரஸ்ட் இயக்குநா் எஸ். ஸ்ரீராம், ரோட்டரி ஆளுநா் என். மணிமாறன், துணை ஆளுநா் கலைச்செல்வன், செயலாளா் சி.சந்திரசேகா், பள்ளித் தலைமை ஆசிரியா் கோ. வெங்கடேசன் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், 530 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டு, எழுது பொருள்கள், 150 ஏழை மாணவா்களுக்கு ஸ்கூல் பேக் ஆகியன வழங்கப்பட்டது. மேலும், மழலையா் பள்ளி ஆசிரியா்கள் 4 பேருக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ. 1500 வீதம் ஓராண்டுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT