நாகப்பட்டினம்

கோயில் உண்டியல் மாயம்

DIN

வேதாரண்யம் அருகே கோயிலின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், உண்டியலைத் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.
தாணிக்கோட்டகம் பகுதியில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோடியம்மன்- முனியதம்பிரான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பூசாரி பரமசிவம் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 அடி உயரமுள்ள உலோகத்தாலான உண்டியல் மாயமானது தெரியவந்தது.
வழக்கமாக இந்த கோயிலின் ஆண்டுப் பெருவிழாவின்போது, அதாவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உண்டியல் திறக்கப்பட்டு, அதில் இருக்கும் ரூபாய் மற்றும் காணிக்கை பொருள்கள் எண்ணப்படுவது வழக்கம்.
உண்டியலைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள், கோயிலினுள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் துண்டித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாய்மேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT