நாகப்பட்டினம்

சௌரிராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை

DIN

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை தங்க கருட சேவை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. 
திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் உள்ள அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா பிப்ரவரி 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை தொடர்ந்து வியாழக்கிழமை சுவாமி தங்க கருட சேவை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிப்ரவரி 17-ஆம் தேதி தேரோட்டமும், பிப்ரவரி 19-ஆம் தேதி திருப்பட்டினத்தில் சமுத்திர தீர்த்தவாரியும், பிப்ரவரி 24-ஆம் தேதி தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT