நாகப்பட்டினம்

வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை    

DIN

திருக்குவளைஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை என்பது வாக்குச்சீட்டு இன்றி வாக்களிக்கும் அமைப்பில் வாக்காளர்கள் தாங்களாகவே தங்களால் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை சரிபார்க்கும் முறையாகும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட பின்பு சரிபார்க்கப்பட்ட காகித ஆவணம் அருகிலுள்ள கண்ணாடிப் பெட்டியில் விழுமாறு இருக்கும். 
இதுகுறித்த, செயல் விளக்கம் கல்லூரி புலமுதல்வர் எம். துரைராசன் தலைமையில் நடைபெற்றது. வட்ட சார் ஆய்வாளர் எஸ். விஜயகாந்த் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செயல்முறை விளக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
இதில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செய்து பார்த்தனர். மின்னணு தேர்தல் கருவியில் ஏற்படும் செயலிழப்புகள், முறைகேடுகள் மற்றும் சேமிக்கப்பட்ட மின்னணு தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்வது தொடர்பான செயல்முறை விளக்கம் கல்லூரியில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் சென்றடைந்தது. 
இதில், திருக்குவளை வட்டாட்சியர் ஸ்ரீதேவி, தேர்தல் துணை வட்டாட்சியர் என். சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ். கணேஷ்குமார்
செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT