நாகப்பட்டினம்

நாகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

நாகை பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நாகை பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற புகாரின் பேரில், நகராட்சி ஊழியர்கள் நாகை பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
நாகை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், நகரமைப்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் இப்பணியை மேற்கொண்டனர். பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கட்டுமானங்கள், வணிக வளாகங்களின் நிழற்கூரைகள், தரைக்கடைகள் அகற்றப்பட்டன. நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

SCROLL FOR NEXT