நாகப்பட்டினம்

குடிநீரை முறைகேடாக எடுத்தால் நடவடிக்கை

DIN

வேதாரண்யம் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரை முறைகேடாக எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் என்.ஆர். ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேதாரண்யம் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரை பிற உபயோகத்துக்கு அதாவது தோட்டங்கள், கால்நடைகள், பண்ணைகள் பராமரிப்புக்குப் பயன்படுத்துவது தெரியவந்தால் குடிநீர் இணைப்புகள் முன்னறிவிப்பின்றிதுண்டிக்கப்படும். மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இணைப்பு துண்டிக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும். மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT