நாகப்பட்டினம்

சட்டநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

சீர்காழி சட்டநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இங்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமி- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நந்தி பகவானுக்கு பல்வேறு வகையான நறுமணப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர்- நாயகி எழுந்தருளி, பிராகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில்...
திருக்குவளை, மார்ச் 3:  திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி நாள்களில் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்தப் பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி கோயிலில் மேற்குறிப்பிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. இதில், வலிவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் நந்தியம்பெருமானை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT