நாகப்பட்டினம்

பள்ளியில் சாரணர் சங்க நிறுவனர் நாள் விழா

நாகை மாவட்டம், தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரணர் சங்க நிறுவனர் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

நாகை மாவட்டம், தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரணர் சங்க நிறுவனர் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் மு.க. விவேகானந்தன் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வ. தங்கவேல் முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வித் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற சாரணர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று , சான்றிதழ்கள் பெற்ற பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர். முதுகலை ஆசிரியர்கள் மஞ்சுளா, பிஸ்வா, மேகலா ஆகியோர் பேசினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, சாரண, சாரணியர் சங்கப் பொறுப்பாசிரியர் த. ரவிச்சந்திரன் வரவேற்றார். நிறைவில்,  சாரணர் வழிகாட்டித் தலைவர் ரேவதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT