நாகப்பட்டினம்

வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு குறைந்தது

DIN


வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப் போக்கால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது சனிக்கிழமை கட்டுக்குள் வந்தது.
வேதாரண்யம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், பன்னாள், ஆயக்காரன்புலம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் வாந்தி, வயிற்றுப் போக்கால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். குடிநீரால் ஏற்பட்ட ஒவ்வாமைக் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், சனிக்கிழமை இந்த பாதிப்பு குறைந்தது. இதற்கிடையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஆறுகாட்டுத் துறை மீனவக் கிராமத்தில் ஹெக்பேஜ் இந்தியா அமைப்பு சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT