நாகப்பட்டினம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு

DIN

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பிரமோத்ஸவ நிகழ்ச்சியாக புஷ்ப பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலின் பிரமோத்ஸவம் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான செடில் உத்ஸவம் மற்றும் திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.  பிரமோத்ஸவ நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றான புஷ்ப பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் அம்பாள் புஷ்ப பல்லக்குக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு நடைபெற்றது.  
அதைத் தொடர்ந்து, ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னர் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.  திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு 
மேற்கொண்டனர்.  பிரமோத்ஸவ நிறைவு நிகழ்ச்சியாக உதிரவாய் துடைப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தாழ கண்ணால குத்தாத...!

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

SCROLL FOR NEXT