நாகப்பட்டினம்

ஆர்.வி. கல்லூரியில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் மகளிருக்கான வேலை வாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செம்போடை ஆர்.வி. பொறியியல் கல்லூரி, சென்னை ஸ்கில்டு ஜாப் நிறுவனமும் இணைந்து நடத்திய முகாமுக்கு கல்லூரியின் நிறுவனர் டாக்டர். ஆர். வரதராஜன் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பிரபல செல்லிடப்பேசி தயாரிக்கும் நிறுவனத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 11 மாணவிகளுக்கு பணி நியமான ஆணைகளை ரைசிங் ஸ்டார் கன்சல்டன்சி தினேஷ் வழங்கினார். பணி நியமனம் பெற்ற மாணவிகளை கல்லூரிச் செயலர் ஆர்.வி. செந்தில், நிர்வாக அலுவலர் என். கோவிந்தராஜூ, பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலமுருகன், பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் யோகானந்த், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அ. பக்கிரிசாமி மற்றும் போராசிரியர்கள் பாராட்டினர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் முகமது பைசல் மற்றும் உதவி பேராசிரியர்கள் லியோ பிரபு, அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT