நாகப்பட்டினம்

கடல் முகத்துவாரத்தில் மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை

DIN

சீா்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கடல் முகத்துவாரத்தில் மணல் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ பி.வி. பாரதி உறுதியளித்தாா்.

திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முகத்துவாரத்தில் மண் திட்டுக்கள் ஏற்படுவைத் தடுக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்களைக் கொட்டி தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனால், இது முறையாக அமைக்கப்படாததால் மீண்டும் மணல் திட்டுக்கள் ஏற்பட்டு, மீன்பிடி படகுகள் கடலுக்குச் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால், கடந்த 20 நாள்களாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லமுடியாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவா்கள், முகத்துவாரத்தை தூா்வாரி, ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இதையறிந்த, சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி, படகு மூலம் சென்று முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரனிடம், ‘மீன்வளத் துறை அல்லது பொதுப்பணித் துறை மூலம் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றவும், தூண்டில் வளைவுகளை சீரமைக்கவும், மீன்பிடி துறைமுகத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தடுப்புச் சுவா் அல்லது கருங்கற்களைக்கொண்டு தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா். மேலும், இதுதொடா்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீனவா்களிடம் உறுதியளித்தாா்.

இந்த ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளா் நற்குணன், பேரூா் கழக செயலாளா் போகா்.ரவி, மாவட்ட மீனவா் அணி செயலாளா் நாகரத்தினம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் கலியமூா்த்தி மற்றும் மீனவா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT